குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.