ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

Sep 10, 2024 - 11:33
Sep 10, 2024 - 17:34
 0
ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!
Namkeens

டெல்லி: தலைநகர் டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 54வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், நிதித்துறை உயர் அதிகரிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மிக முக்கியமாக, புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கேன்சர் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

நம்கீன் எனப்படும் பிராண்ட் நொறுக்குத்தீனிகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் 18%ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியை 18% ஆக குறைப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்களிடம் இருந்து கிடைக்கும் வருவாய் கடந்த 6 மாதத்தில் 412% அதிகரித்து அதாவது ரூ.6,909 வருவாய் கிடைத்துள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்கீன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் நொறுக்குத்தீனி பொருட்களை விற்பனை செய்யும் பிகாஜி புட்ஸ் (Bikaji Foods), பிரதாப் ஸ்நாக்ஸ்(Prataap Snacks), கோபால் ஸ்நாக்ஸ் (Gopal Snacks)  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உச்சம் அடைந்துள்ளன.

அதாவது பிகாஜி புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3.90% உயர்ந்து ரூ.867.50 என்ற நிலையில் உள்ளது. பிரதாப் ஸ்நாக்ஸ் பங்கு விலை 3.07% அதிகரித்து ரூ.838.60 என்று விற்பனையாகிறது. இதேபோல் கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow