மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு... வைரலாகும் காணொளி!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடி வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக மூத்த மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

Oct 8, 2024 - 20:48
 0
மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு... வைரலாகும் காணொளி!
மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு

கொல்கத்தா கடந்த 9 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஒருபக்கம் விசாரணை நடைபெற்று வந்தாலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்கவும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

 இதற்கிடையே, ‘மாநில சுகாதார துறை செயலர் என்.எஸ்.நிகாமை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உட்பட 9 கோரிக்கைகளை முன்வைத்து, இளநிலை மருத்துவர்கள் 6 பேர் கடந்த 5-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். “இந்த வழக்கை சிபிஐ மெதுவாக விசாரித்து வருகிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது எங்கள் கடைசி முயற்சி’’ என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 50க்கும் அதிகமான மூத்த மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை மருத்து மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மூத்த மருத்துவர்களின் இந்த ராஜினாமா நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow