Petrol Price: தீபாவளி ஆஃபர்..! பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு... எவ்ளோன்னு தெரியுமா..?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என சொல்லப்படுகிறது.

Oct 30, 2024 - 14:05
Oct 30, 2024 - 14:05
 0
Petrol Price: தீபாவளி ஆஃபர்..! பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு... எவ்ளோன்னு தெரியுமா..?
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு

சென்னை: தொடர்ந்து 227வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் கூட பெட்ரோல், டீசல் விலையால் மறைமுகமாக பாதிக்கப்படுவது உண்டு. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், பொதுமக்களுக்கு தீபாவளி ஆஃபராக அமைந்துள்ளது. 

பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) அறிவித்துள்ளன. இதன் காரணமாக தான் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொலைதூர இடங்களில் உள்ள நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில், நிறுவனங்கள், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு கட்டணத்தை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று (அக்.30) முதல் டீலர் கமிஷன் தொகையில் மாற்றம் இருக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தயாரிப்புகளின் சில்லறை விற்பனை விலையை பாதிக்காது என்றும், வாடிக்கையாளர் சேவை, தரத்தை மேம்படுத்தும், அதேபோல் சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களையும் மேம்படுத்தும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. அதேபோல், வாடிக்கையாளர் சேவை தரத்தையும் சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனையும் மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பங்க் டீலர் கமிஷன்கள், விற்பனையையும் இடத்திற்கு ஏற்பவும் மாறுபடும் என தெரிகிறது. தற்போது, டீலர்களுக்கு ஒரு கிலோ லிட்டருக்கு 1,868.14 ரூபாய், அதாவது 0.875 சதவீத உற்பத்தி விலையில் பெட்ரோல் கமிஷனாக வழங்கப்படுகிறது. டீசலில் ஒரு கிலோ லிட்டருக்கு 1389.35 ரூபாய் என வழங்கப்படுகிறது. பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 4 ரூபாய் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது பற்றி இந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 

மேலும் 88,000 பெட்ரோல் பங்குகளின் 7 ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒடிசாவில் பெட்ரோல் விலை 4.69 ரூபாய் குறைய வாய்ப்புள்ளதாகவும், இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow