சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பெண் ஒருவர் ஓலா செயலியில் ஆட்டோ சவாரிக்கு புக் செய்துள்ளார். அப்போது அவரது நண்பர் வந்ததால் சவாரியை ரத்து செய்ததாக தெரிகிறது. நண்பரின் வாகனத்தில் அந்த பெண் ஏறுவதற்குள் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் பெண்ணை கண்ணத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?