திருமாவை வைத்து திமுக மது ஒழிப்பு நாடகம் நடத்துகிறது – எல்.முருகன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.