'மோட்டோ' போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஸ்டைலிஷ் லுக்கில் புதிய மாடல்.. என்ன ஸ்பெஷல்?

Motorola Edge 50 Smartphone Launch Date : மோட்டோரோலா போனில் கவர்ச்சிகரமான 6.67 இன்ச் 1.5K வளைந்த POLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.

Jul 25, 2024 - 21:32
Jul 26, 2024 - 10:13
 0
'மோட்டோ' போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஸ்டைலிஷ் லுக்கில் புதிய மாடல்.. என்ன ஸ்பெஷல்?
Motorola Edge 50 Smartphone Will Launch on August 1

Motorola Edge 50 Smartphone Launch Date : இந்தியாவில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.  மோட்டோரோலா மாடல் போன்கள் இந்தியாவில் வெளியாகும்போதெல்லாம் அதன் விற்பனை அதிவேகத்தில் முடிந்து விடும். இந்நிலையில், இந்நிறுவனம் 'மோட்டோரோலா எட்ஜ் 50' (Motorola Edge 50) என்ற மாடல் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் களமிறக்க உள்ளது.

இது தொடர்பாக மோட்டோரோலா வெளியிட்ட அறிவிப்பில்,''மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது உலகின் மிக மெல்லிய MIL-810 இராணுவ தர ஸ்மார்ட்போன் ஆகும். ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்'' என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோரோலா எட்ஜ் 50 மாடலின் சிறப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த போனில் கவர்ச்சிகரமான 6.67 இன்ச் 1.5K வளைந்த POLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். கேமராவை பொறுத்தவரை சோனி LYT-700C 50MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13MP அல்ட்ரா-வைட் கேமரா, 30x டிஜிட்டல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ சென்சாரும் உள்ளதால் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 32MP செல்ஃபி கேமரா அம்சமும் இதில் உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 போன் Android 14 இயங்குதளம் கொண்டது. இது தவிர 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் அதி விரைவில் போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.  ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ள இந்த போனின் விலை விவரம் வெளியாகவில்லை. 

இதேபோல் ரியல்மி நிறுவனம் ரியல்மி வாட்ச் எஸ்2 (realme watch s2) மாடல் ஸ்மார்ட்வாட்ச்சை வரும் 30ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 1.3 இன்ச் சர்குலர் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த வாட்ச் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் AI வாய்ஸ் அசிஸ்டன்ட், இதயத் துடிப்பு மானிட்டர், ஃப்ளுடூத் காலிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் இடம்பெற உள்ளன. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 15 முதல் 20 நாட்கள் வரை பேக்கப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow