ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்
பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், சிவாஜியை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டதோடு, காங்கிரஸ் கட்சியிலும் தன்னை ஐக்கியமாக்கி கொண்டார்.
1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இவர், திமுக வேட்பாளர் டி.கே.சுப்ரமணியம் பெற்ற வாக்குகளைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று அபார வெற்றிப் பெற்றிருந்தார்.
What's Your Reaction?