சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி.. அப்பாவி மக்களுக்கு ஆசாமிகள் குறி

மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Sep 24, 2024 - 14:35
Sep 24, 2024 - 18:24
 0
சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி.. அப்பாவி மக்களுக்கு ஆசாமிகள் குறி
சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி

சிபிஐ அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் மோசடியில் ஈடுபட்ட  நபர்களிடம் இருந்து ரூ.52,42,000 மற்றும் ரூ.1,70,56000 பணத்தை சைபர் க்ரைம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்பாவி பொதுமக்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணையதள மோசடியளர்கள் பாதிக்கபட்ட நபருக்கு FedEx வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். அப்போது, பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து மும்பை அந்தேரி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக மற்றொருவர், காவல்துறை அதிகாரி என்று கூறி, பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சொல்லுவதை செய்ய தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால், அவர் பயந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1,18,00,000 ரூபாய் பணத்தை மோசடி நபர் கூறிய பல்வேறு வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை பாதிக்கப்பட்ட நபர் அனுப்பியுள்ளார். பின்னர் அவர் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொண்டதன் பேரில், புகார் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இது குறித்து விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் வங்கி கண்ணக்கில் இருந்து பணம் பெறப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளர் ரமேஷ் பாய் படாபி போக்ரா மற்றும் முகவர்கள் பரேஷ் நர்ஷிபாஹாய் மற்றும் விவேக் ஆகியோர் கைது செய்யபட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். சிபிஐ அதிகாரி போன்று ஆள் மாறாட்ட மோசடி செய்த 52,45,000 மற்றும் 1,70,56,000 ஆயிரம் பணத்தை சைபர் க்ரைம் போலீசார் உடனடி நடவடிக்கையால் மீட்டனர்.

இதே போன்று மேலும் ஒரு நபர் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக அழைத்து, தாங்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ அதிகாரியை தொடர்புக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஒரு எண்ணை கொடுத்து அதனை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

சிபிஐ அதிகாரியாக பேசிய நபர், பாதிக்கப்பட்ட நபரிடம் நீங்கள்  குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நாங்கள் சொல்லும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் தவறினால் நீங்கள் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் பாதிக்கப்பட்டவர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி உள்ளார் 

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவை பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வார். அப்போது, நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும் எனவும், சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருப்பது அவசியம் எனவும் குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம் எனவும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்க வேண்டும் முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow