உலகம்

"எனக்கு DIVORCE வேணும் சார்.." கணவன் சொன்ன காரணம்.. அதிர்ந்த நீதிமன்றம்!

By Christon
05 Oct 2026, 08:37 PM
கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாகக் கூறி துருக்கியைச் சேர்ந்த நபர் விவகாரத்து கோரியுள்ளார்.


மனைவியின் 'அதீத சுத்தப்பத்தால்' கடுப்பான துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், திருமணமான நான்கே ஆண்டுகளில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனது மனைவியைப் பற்றிப் பல்வேறு பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார். மனைவி பாத்ரூமைச் சுத்தம் செய்து முடித்தவுடனேயே கணவர் அதைப்பயன்படுத்தக் கூடாதாம். அப்படியே மீறிப் பயன்படுத்தினால் வீட்டில் பூகம்பமே வெடிக்குமாம்.

அதுமட்டுமில்லாமல், தலைமையனை மற்றும் பெட்ஷீட்டில் கணவரின் தலைமுடி தவறி விழுந்தால் கூட, மனைவி பயங்கரமாகக் கோபப்பட்டுச் சண்டையிடுவாராம். மனைவியின் இந்த செயல் நாளடைவில் இருவருக்கும் இடையே தினமும் பெரிய தகராறாகவே உருவெடுத்துள்ளது.

மனைவியின் கட்டுப்பாடுகள் இத்துடன் முடியவில்லை. சமையலறை அழுக்காகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக, வீட்டில் சமைப்பதையே சுத்தமாக நிறுத்திவிட்டாராம். இதனால் இந்தத் தம்பதியினர் தினமும் ஆன்லைனிலேயே உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அன்றாட வாழ்க்கையை நார்மலாக வாழக்கூட மனைவியின் கட்டுப்பாடுகள் அனுமதிக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான கணவர் விவாகரத்து தான் ஒரே வழி என முடிவெடுத்துள்ளார். மேலும், மனைவியால் வீட்டிலும், மனதளவிலும் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக சுமார் 2,50,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல்) வழங்கிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியெல்லாம் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறதா என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், இங்கு மனைவியின் அளவுக்கு மிஞ்சிய சுத்தம், கணவரின் வாழ்க்கையையே சோதனையாக்கிவிட்டது.