தமிழ்நாடு

சிதம்பரத்தில் விரிவடைந்த ரூபிஅபெக்ஸ் குழுமம்! ஒரே நாளில் 3 புதிய கிளைகள் தொடக்கம் !

By Santhosh
01 Nov 2026, 06:52 PM
சிதம்பரத்தில் ரூபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபிஅபெக்ஸ் நிதி லிமிடெட் மற்றும் கோல்டு லோன் புதிய கிளைகளை நிறுவனத் தலைவர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

சிதம்பரத்தில் ருபிஅபெக்ஸ் குழுமத்தின் சார்பில் புதிய கிளைகள் திறப்பு விழா 31.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் ருபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபாய்அபெக்ஸ் நிதி லிமிடெட்டின் புதிய கிளை மற்றும் ரூபாய்அபெக்ஸ் கோல்டு லோனின் கிளை ஆகியவை பொதுமக்களின் பேராதரவுடன் திறந்து வைக்கப்பட்டன.

புதிய கிளைகளை ருபிஅபெக்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் திரு. சந்திரசேகர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ருபிஅபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. துரைசிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான நிதிச் சேவைகளை வழங்கி, தனது சேவைப் பரப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் ருபிஅபெக்ஸ் குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தில், சிதம்பரத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கிளைகள் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.