தமிழ்நாடு

வார தொடக்கத்திலேயே இப்படியா? தங்கம் விலை கடும் உயர்வு!

By Christon
17 Aug 2026, 10:17 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 17) சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச்சந்தை போக்குகள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் தினசரி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 எனக் குறைந்திருந்த நிலையில், தற்போது அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தகுந்தது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.