சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த சூழலில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், அதன் பிறகு மீண்டும் தொடர்ச்சியாக உயரத் தொடங்கியது. கடந்த 29 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்திருந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,640-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் (செப்.30) மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதைத்தொடந்து நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.1,09,440 என்ற அளவில் விற்பனையானது.
இந்த நிலையில், நேற்று விலை சரிவைச் சந்தித்த தங்கம், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (அக்.2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,775-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.