தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

By Christon
06 Jan 2026, 10:25 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
கடந்த வாரங்களில் ஓரளவு குறைந்து காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், வாரத்தின் தொடக்கத்தில் இருந்து மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியிருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நேற்றைய அதிரடி விலையேற்றம்

வாரத் தொடக்க நாளான நேற்று, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இருமுறை உயர்ந்து. காலை ரூ.640 உயர்ந்ததைத் தொடர்ந்து, மாலையிலும் ரூ.640 உயர்ந்து, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 விலை உயர்ந்தது. நேற்றைய முடிவில், ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,080-க்கு விற்பனை ஆனது.

நேற்று சில்லறை வர்த்தகத்தில், ஒரு கிராம் வெள்ளி ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்பனை ஆனது.

இன்றைய விலை நிலவரம்

நேற்றைய தொடர் உயர்விற்குப் பிறகு, இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.271-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,71,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.