கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, வார இறுதியில் சற்று உயர்ந்த நிலையில், வார தொடக்கமான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம்(24.10.2026) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80-ம், கிராமுக்கு ரூ.10-ம் உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.