திரைப்பட இயக்குநரும், "இயக்குநர் இமயம்" எனப் போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் 10-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாரதிராஜாவின் உடலுக்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது திரையுலகப் பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் கவுரப்படுத்தினர்.
இதையடுத்து, பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்தனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
72 குண்டுகள் முழங்க, காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்திய நிலையில், அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகினர் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜாவிற்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நல குறைவால் மரணமடைந்தார். அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், இறுதி சடங்கு காரியங்களை மகள் ஜனனி செய்தார். இந்த காட்சி பார்ப்போரின் கண்ணை குளமாக்கின.