சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
கடந்த 10-ந்தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 'ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும்' விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்தது.
கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 'ரூ.14,290-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும்' விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு 'ரூ.1,600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும்', கிராமுக்கு 'ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும்' விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை:
இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை "சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.110 உயர்ந்து, ரூ.14,710-க்கு" விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் இரண்டாவது முறை விலை ஏற்றம்:
நாளுக்கு நாள் விலை ஏற்றத்தையே தாங்கிக்கொள்ள முடியாத நகை ப்ரியர்களால் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது என்பது பதறவைக்கும் செய்தியாகவே பார்ப்பார்கள்.
இந்த நிலையில், தற்போது தங்கம் விலை இன்றே ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, "கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும்" , "சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,800-க்கும்" விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகை ப்ரியர்கள் அனைவரும் ஷாக்கில் உள்ளனர்.
வெள்ளி விலை
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை "ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கு" விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை "ரூ.10,000 உயர்ந்து ரூ.2,65,000"-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியும் நான் மட்டும் என்ன சளைத்தவனா என்று கூறுவது போல் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை "கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும்", "ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000 ரூபாய்க்கும்" விற்பனை செய்யப்படுகிறது.