தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏவிமான முத்துக்குமார் சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 29) சரணடைந்தார்.
வழக்கு பின்னணி
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகப் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து சுமார் ரூ.400 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கடந்த 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் சரண்
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் கடந்த 4 மாதங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் முத்துக்குமார் இன்று நேரில் ஆஜராகிச் சரணடைந்தார்.