சண்டியர்' என்ற தலைப்பில் 'ச கமலின் அடுத்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. 2003ல் 'விருமாண்டி' படத்திற்கு முதலில் 'சண்டியர்' என்றுதான் பெயரிடப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால், தலைப்பை மாற்றினார் கமல். இப்போது கமல் மீண்டும் தனது படத்துக்கு அதே 'சண்டியர்' பெயரை வைத்திருக்கும் நிலையில் கிருஷ்ணசாமியிடம் பேசினோம்.
'சண்டியர்' தலைப்பில் உங்களுக்கு என்னதான் பிரச்னை?
"அந்த பெயரில் எதுவுமே இல்லையென்றால் கமல் ஏன் அதையே வைக்கிறார்? 'சண்டியர்' என்றால் 'போக்கிரி' என்று பொருள். தென் மாவட்டங்களில் சிலர் 'உன்னைவிட நான் பிறப்பிலும், உடல் வலிமையிலும் பெரியவன்' என்பதை வெளிக்காட்டும் வகையில் இப்பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பிரச்னைகள் நடந்திருக்கின்றன."
'சண்டியர்' என்பது சாதிப் பெயரைக் குறிக்கிறதா?
நேரடியாக அப்படி குறிக்கவில்லை. ஆனால், ஒரு பிரிவினர் அப்படிச் சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்கிறார்கள். முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில்தான் இப்பெயர் அதிகம் புழங்கப்படுகிறது. தென் தமிழகத்தில் சச்சரவுகள் வரக் காரணமாகவும் இப்பெயர் இருந்தது."
ஏன்? எப்போதோ நடந்ததை வைத்து இப்போது எதிர்ப்பது
ஒருகட்டத்தில் சாதியின் பெயரிலேயே பல படங்கள் வரத்தொடங்கின. சமத்துவம், சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும்போது, இதற்கு எதிராக படங்களும் வந்தன. சிவகங்கையில் ஒரே சாதிக்குள்ளேயே இரு பிரிவினருக்கு இடையே பழிக்குப்பழி கொலைகள் நடக்கின்றன. இச்சமயத்தில் இப்பெயர் வைப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகிவிடும். படத்தைப் பார்த்து திருடுபவன் இருக்கிறான். கொலை செய்பவன் இருக்கிறான். அதுபோல கமல் சண்டியராக நடித்தால் அதைப் பார்த்து பல இளைஞர்கள் சமூகவிரோதிகளாக மாறுவார்கள்."
படத்தின் கதை என்னவென்றே தெரியாமல் எதிர்க்கலாமா?
"கதை தேவையில்லை, பெயரே போதும். இங்கு பிரச்னையே பெயர்தானே. படத்தின் 'Revenge is Beautiful... Revenge is Satisfaction' என குறிப்பிடுகிறார். இதன் அர்த்தமென்ன? 'பழிக்குப்பழி அழகானது. பழிக்குப்பழி திருப்திகரமானது.' இதற்கும் , 'Revenge can be settled only in Blood' என குறிப்பிடுகிறார். அதாவது 'ஒரு கொலை நடந்துவிட்டால் அதற்கு இன்னொரு கொலை தான் தீர்வு என்கிறார். தவறு செய்பவனை திருத்த முயல வேண்டுமே தவிர, தூண்டிவிடக் கூடாது."
2003ல் இதே பெயரை வைத்தபோது உங்கள் எதிர்ப்பால் பின்வாங்கியவர், இப்போது மீண்டும் இதே பெயரைப் பயன்படுத்த என்ன காரணம்?
2003ல் நாங்கள் பலமாக இருந்தோம். கமல் பலவீனமாக இருந்தார். அதனால் நான் அவரை பின்வாங்க வைத்துவிட்டேன் என கமல் தவறாக நினைக்கிறார். இன்று தான் எம்.பியாகிவிட்டோம் பலமாகிவிட்டோம் என நினைத்துக்கொண்டு இதை செய்கிறார். ஆனால், முன்பைவிட இப்போதுதான் நாங்கள் பலமாக இருக்கிறோம். அன்று 'சண்டியர்' என்றால் என்னவென்று புரியவைப்பதற்கே பல மாதங்களாகின. இன்று அப்படியில்லை. சமூக வலைதளத்தில் சுயமாக பலர் இதைக் கண்டித்து எழுதுகிறார்கள். தனிப்பட்ட முறையில் கமல் மீது எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவரது படங்கள் சமூகத்தில் மோதலை உண்டாக்குகிறது. அதுதான் பிரச்னை.
'தேவர் மகன்' படத்தில் போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே' என ஒரு பாடலை வைத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்! இதுபோன்று வன்முறைக்கு வித்திடுவதால்தான் இன்றும் அப்பெயரை எதிர்க்கிறோம்.
'தேவர் மகன்' படத்தின் மையக் கரு என்பது சாதியை வைத்து அடித்துக்கொள்ளாதீர்கள், படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்பதுதானே?
'தேவர் மகன்' வருவதற்கு முன்பாக அச்சமூகத்தில் யாரும் படிக்கவே இல்லையா? அச்சமூகத்தின் உள்சண்டைபோல காண்பித்து, 'நாங்கள் அரிவாளை எடுக்கக்கூடியவர்கள்' என்ற குறியீட்டை கமல் அதில் வைத்திருக்கிறார். நாட்டில் பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர் ஆகியோரை உருவாக்கலாம். ஆனால், கமல் போக்கிரிகளை உருவாக்குகிறார். அவர் மூலம் சமூகம் திருந்துவதில்லை, மாறாக கொம்புசீவி விடப்படுகிறது. கமல் சாதி போதையை ஏற்றிய குற்றவாளி. நீ வன்முறை செய்வதற்குத்தான் பிறந்திருக்கிறாய்' என அவர் இளைஞர்களைக் கெடுக்கிறார்."
அமைச்சரிடம் புகார் அளித்துள்ளீர்கள், அவர் என்ன சொன்னார்?
2004 ஆண்டிலேயே 'சண்டியர்' பெயரை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டது. அதை மீண்டும் கமல் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே தவறு. இப்படியான படங்கள் வரும்போது மீண்டும் சாதிச் சண்டை தலைதூக்கும் அபாயம் உண்டு. எனவே இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சொல்லுமாறு கூறினேன். அவரும் பாசிட்டிவ்வாகவே பதில் கொடுத்தார். ஒருவேளை படத்தின் தலைப்பை மாற்றவில்லை என்றால் அப்படம் வெளியாகும் திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்."
த.வெ.க. அரசின் ஆறு மாத ஆட்சி குறித்து உங்களது பார்வை?
"முழுக்க முழுக்க அனைவரும் அனுபவமில்லாத வர்கள். ஆட்சி செய்வதை இப்போதுதான் க்கும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பல குறைபாடுகள் இருக்கின்றன. அரசு, நிர்வாகம், காவல்துறை அனைத்தும் தனித்தனியாக இயங்குவதுபோல தெரிகிறது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்"
அவற்றை எல்லாம் முதல்வர் தனது துணை சபாநாயகர் ஒருவரை அடித்தது, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரம் என த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டதே?
"இவர்கள் எல்லாம் அரசியல் பாடம் பயிலாமல், களத்தில் போராடாமல், மக்களுடன் தொடர்பில்லாமல் வந்ததன் விளைவுதான் இவை. பெரும்பாலானோர் ரீல்ஸ் மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்."