பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர்பிரிந்தது. இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை நகைச்சுவையோடு திரைக்கதையாக அமைப்பதில் வல்லவர் என்பதால், இவர் "திரைக்கதை மன்னன்" என்று பரவலாக அழைக்கப்படுகிறார்.
1953-ம் ஆண்டு 7 ம் தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திற்கு அருகிலுள்ள வெள்ளாங்கோயில் பிறந்தவர். இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது. பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
1979 ஆம் ஆண்டு வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் மற்றும் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகப் பங்களித்துள்ளார். ஒரே படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை எனப் பல துறைகளையும் கையாண்டு அசத்தியவர்.
முந்தானை முடிச்சு (1983) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், 2014 இல் SIIMA-வின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றார்."பாக்யா" என்ற வார இதழின் ஆசிரியராகவும், நாவலாசிரியராகவும் இருந்து வந்தார்.
50 ஆண்டுகால திரையுலக அனுபவம் கொண்ட பாக்யராக் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமான நிலையில், ஒரே மாதத்தில் மற்றுமொரு திரையுலக ஜாம்பவான் மறைந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.