சினிமா

“Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்ட முத்துக்குமரன்? வெளியான அடுத்த வீடியோ!

By Sumalekha
09 Oct 2026, 12:27 PM
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், “Part Time Boyfriend” ஆக இருக்க அப்ளிகேஷன் போட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளப் பிரபலமான வஹிதா அக்தர், முத்துக்குமரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வஹிதா அக்தர் வெளியிட்ட வீடியோக்களில், முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு, அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் உறவு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் பின்னர் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள மற்றொரு வீடியோ இந்தச் சர்ச்சையை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில் முத்துக்குமரன், வஹிதா அக்தரிடம், “இந்த மூஞ்ச எனக்குப் பிடிச்சிருக்கு. பார்ட் டைம் பாய் ஃப்ரெண்டாக இருக்க அப்ளிகேஷன் போட்டுள்ளேன். என்னைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறுவதாக இடம்பெற்றுள்ளது.

இதற்கு வஹிதா அக்தர், “யோசிச்சு முடிவெடுக்கிறேன்” என்று பதிலளிப்பதுபோல அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன.



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், முத்துக்குமரன் குறித்த விவாதங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே வஹிதா அக்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதேநேரத்தில், வீடியோவின் முழுமையான பின்னணி மற்றும் இரு தரப்பினரின் விளக்கங்கள் என்ன என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.