ஆன்மிகம்

இன்றைய நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

By Bhavani v
23 Nov 2026, 06:31 AM
இன்றைய நாள் எந்த ராசிக்குச் சாதகமாக அமையப்போகிறது? யாருக்கு பணவரவு காத்திருக்கிறது? யார் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்? குடும்பம், வேலை, தொழில் என 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவ்வப்போது மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், மாலையில் உற்சாகம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டு. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் வழக்கமான சூழலே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரித்தாலும், திடீர் செலவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூரில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். மாலையில் குடும்பத்துடன் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழல் நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், அவை சுபச் செலவுகளாக இருப்பது ஆறுதல் தரும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் வரவு, செலவு சுமாராகவே இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்குத் தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் நிம்மதியாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களாலும் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். முக்கியமான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நவீன வடிவமைப்பிலான ஆடைகளை வாங்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். உங்கள் தேவையை அறிந்து நண்பர்கள் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தினர் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்து உற்சாகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சிலர் கடன் வாங்க வேண்டிய சூழலும் உருவாகலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியே செல்லும்போது பொருள்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எதிலும் நிதானமாகச் செயல்படுவது அவசியம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்களால் சில செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்கள் உருவாக வாய்ப்புள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர் கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படலாம். இருப்பினும், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறும் நாளாக அமையும். தேவையான பணம் கையில் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டு. குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான சூழலே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். அலுவலகத்தில் அதிகாரிகள் கடிந்துகொண்டாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு காரிய அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படலாம். சிலருக்குத் திடீர் பயணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இருப்பினும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். புதிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கலாம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும்.