ஆன்மிகம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.. இன்றைய ராசி பலன் (அக்.3)

By Christon
03 Oct 2026, 06:59 AM
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..


மேஷம்

இன்றைய தினம் உங்களுக்குப் பிடித்தமான காரியங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதோடு, அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளையும் பெறக்கூடும். மேலதிகாரிகளிடம் பேசும்போது அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தில் பெரியோர்களின் அறிவுரை வழிகாட்டும். சிறிய உடல்நலக் கோளாறுகளை அலட்சியம் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரிஷபம்

திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் இன்றைய நாளைச் சிறப்பாக்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பணியிடத்தில் உங்கள் அனுபவத்திற்கு உரிய மரியாதை கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும். தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். நிதியைப் பொறுத்தவரை முறையான திட்டமிடுதல் சேமிப்பை உயர்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம்

அலுவலகத்தில் கடினமான சவால்களையும் மிக எளிதாகக் கையாண்டு சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தொழில் ரீதியான புதிய தொடர்புகள் வருங்காலச் சேர்க்கைக்கு வழிவகுக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், தேவையற்ற ஆன்லைன் பயன்பாட்டுச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் மனநிறைவைத் தரும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.

கடகம்

கையில் எடுத்த காரியங்களை விரைவாக முடித்து காட்டுவீர்கள். பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த நிலுவைத் தொகைகள் கைக்கு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆதரவு உங்களது முயற்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். சுப நிகழ்வுகள் மற்றும் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள்.

சிம்மம்

இன்று எதிலும் முன்னின்று வழிநடத்தும் சூழல் அமையும். கொடுக்கப்பட்ட பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்து முடித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வருமானம் சிறப்பாக இருந்தாலும், எதிர்பாராத சில செலவுகள் வரக்கூடும் என்பதால் சேமிப்பில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் சாதனைகள் பெருமிதம் கொள்ள வைக்கும். கலைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையினருக்கு புதிய கதவுகள் திறக்கும்.

கன்னி

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் அமைதியான அணுகுமுறை உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். தொழிலில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் மெதுவான வளர்ச்சி இருந்தாலும், வருமானம் குறித்த நம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகள் செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலவும். உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்திலும் உணவுப் பழக்கத்திலும் கவனம் தேவை.

துலாம்

செயல்களில் வேகமும் தெளிவும் காணப்படும். நீண்ட நாட்களாக நீடித்த தடைகள் விலகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புச் செய்திகள் வரக்கூடும். தொழிலில் இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வர்த்தகத்தில் நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பப் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண்பீர்கள். மாணவர்களும் கலைஞர்களும் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி முன்னேறுவார்கள்.

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முக்கியமான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவசர முடிவுகளைத் தள்ளிப்போடுவது சிறந்தது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தவறுகளைத் தவிர்க்கும். தொழில் ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகளை தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம். வீண் விவாதங்களைத் தவிர்த்து குடும்பத்தில் அமைதியைப் பேணுங்கள். மாலக்குப் பிறகு சூழ்நிலைகள் படிப்படியாகச் சீராகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது இன்றைய நாளைச் சுமுகமாக்கும்.

தனுசு

பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். தாமதமான வேலைகள் மீண்டும் வேகம் பிடிக்கும். தொழிலில் உங்கள் அனுபவ அறிவு கை கொடுக்கும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேர வாய்ப்புள்ளது. வரவு செலவு கணக்குகளைத் தெளிவாக வைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் கசப்புணர்வுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். தூரத்து உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களும் படைப்பாளிகளும் தங்களின் திறமையால் சிறப்பான இடத்தை அடைவார்கள்.

மகரம்

ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்தாலும் உங்களின் திறமையால் அனைத்தையும் சிறப்பாகக் கையாள்வீர்கள். உழைப்பிற்கு உரிய மரியாதையும் புதிய பொறுப்புகளும் தேடிவரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை படிப்படியாக முன்னேற்றமடையும். தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொறுமையுடன் பேசினால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். தொடர் உழைப்பு எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளமிடும்.

கும்பம்

புதிய சிந்தனைகளும் உத்திகளும் மனதில் உதிக்கும் நாள். அலுவலகத்தில் உங்களின் புதிய அணுகுமுறைக்கு வரவேற்பு கிடைக்கும். தொழிலில் விரிவாக்கம் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெறும். வியாபாரத்தில் புதிய விற்பனை முறைகளை அறிமுகப்படுத்தி லாபம் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் தெளிவான ஆவணங்களைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கும். சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் மேலோங்கும் நாளாக இது அமையும்.

மீனம்

பணிகளை முன்னுரிமைப்படுத்திச் செய்து முடிப்பீர்கள். வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எளிதாகக் கையாள்வீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது நல்ல பலனைத் தரும். நிதி வரவு திருப்திகரமாக இருந்தாலும் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனமாகப் படிப்பது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதைச் சிறப்பாக நிர்வகிப்பீர்கள். பழைய கவலைகள் மறைந்து மனதில் அமைதியும் தெளிவும் பிறக்கும்.