ஆமாம் இந்த உலகத்தில் உள்ள செல்வங்கள் எல்லாமும் உங்களிடம் இருந்தாலும், நீங்கள் ஆரோக்யமாக, உடல்நலம், மனநலத்துடன் இருந்தால் மட்டுமே அவற்றை எல்லாம் அனுபவிக்க முடியும். நீங்கள் நன்றாக வாழவேண்டும், உபாதைகள் இருந்தால் அவை விரைவில் நீங்க நோய் நொடிகளின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். உங்களுக்கோ. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ உடல்நலம் சார்ந்த வேண்டும். சகல சௌபாக்யங்களையும் நீங்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும். இத்தகைய வேண்டுதல்களுடன் உங்கள் பெயராலேயே பூஜிக்கப்பட்ட தன்வந்திரி யந்திரம்தான் இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.
இந்த யந்திரத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னால், இதோ தன்வந்திரி பசுவானைப்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். பூவுலக மனிதர்களான நமக்கெல்லாம் சோர்வு, உடல்நலக் குறைவுகள், பிணிகள் எல்லாம் வருவது சகஜம்தான். ஆனால், தேவர்களுக்கு? அவர்களுக்கும் இத்தகைய சங்கடங்கள் எல்லாம் ஆகியில் வரத்தான் செய்தன. மண்ணுலக மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டிய தேவர்கள், தாங்களே துவண்டுகிடந்தால், என்ன செய்வது? எனவே பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கத் தீர்மானித் தார்கள். கடைந்தார்கள். முதலில் ஆலகாலம் வந்தது. அடுத்து ஐராவதம், உச்சைஸ்ரவம் என்று ஆகிலக்ஷ்மி வரை அத்தனையும் வந்தன. முடிவாக அமுத கலசத்தினை எடுத்துக்கொண்டு வெளி வந்தார். தன்வந்திரி நம்முடைய தேவருலகினருக்கு அருள்வதற்காக அமுதத்துடன் தோன்றிய தன்வந்திரி, பூவுலக மக்களான நமக்கெல்லாம் அருளவும், உடல்நலனைப் பேணிடும் சிகிச்சை முறைகளை உலகுக்கு அளிக்கவும். காசி மன்னராக திவோதாசர் என்ற பெயருடன் பூவுலகில் அவதரித்தார் என்றும், ஆயுர்வேத முறையினை உலகிற்கு அளித்தவர் இவரே என்றும் சொல்லப்படுகிறது.
உலகின் முதல் மருத்துவர் என்பதால், தன்வந்திரியை ஆதி வைத்தியர் என்றும் சொல்வர். எந்த ஒரு உணவுப்பொருளையும் தன்வந்திரிக்கு நிவேதனம் செய்தால். அதில் உள்ள தோஷங்கள் நீங்கு வதோடு அது அமுதத்துக்கு நிகரான தாசிவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. பாற்கடலில் இருந்து தன்வந்திரி தோன்றியது, தேய்பிறை திரயோதசி தினம் ஒன்றில் என்பதால் (ஐப்பசி மாத தேய்பிறை திரயோதசி தினம்) திரயோதசி தினத்தில் அவரை ஆராதிப்பதும். இயன்ற பொருளை அவருக்கு நிவேதனம் செய்து பிறருக்கு அளித்து நாமும் உண்பதும் விசேஷமான நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை
மேலும் சிகிச்சைக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் முன் தன்வந்திரியை வணங்கிட்டு ஆரம்பித்தால், பிணிகள் சீக்கிரமே குணமாகும் என்பது ஐதிகம்.
தன்வந்திரியைப்பற்றித் தெரிந்துகொண்டாயிற்றா, இப்போது இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டுள்ள ஸ்ரீதந்வந்திரி யந்திரத்தை எடுங்கள்.
உங்களுடைய நன்மைக்காகவே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பூரண ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், வடசென்னையில் காலடிப்பேட்டை தலத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், மூலவர் பெருமாளின் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்டது இந்த யத்திரம்.
பிறகு வைகாசி பிரமோற்சவத்தினையொட்டி, கருடவாகனத்தில் எழுந்தருளி சேவைசாதித்த உற்சவர் பெருமானின் திருவடிகளிலும் இந்த யந்திரங்கள் வைத்து ஆராதிக்கப்பட்டன.
ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் சுற்றிலும் இருந்து எம்பெருமானை சேவித்துக்கொண்டிருக்க அந்த*
சமயத்தில் எம்பெருமானின் திருவடிகளிலும் அவற்றைத் தாங்கியிருந்த கருடபகவானின் திருக்கரங்களிலும் இந்த யந்திரங்கள் நிறைத்து வைக்கப்பட்டன. பிறகு விசேஷ ஆராதனை செய்யப்பட்டது. (பூஜையை குமுதம் பக்தி ஸ்பெஷல் யூ டியூபில் பார்க்கலாம்)
பொதுவாக எம்பெருமானின் திருவடிகளில்ஒன்றைசமர்ப்பிக்கும்போது அது பரிபூரணமானதாக மாறிவிடும் என்பது ஐதிகம் அந்த வகையில் இந்த தன்வந்திரி யந்திரம் முழுமையான பலன் தரக்கூடிய ஆற்றல் பெற்றதாகவே உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த யந்திரங்கள், உற்சவர் பெருமாளை வாகனமாகத் தாங்கியிருந்த கருடபசுவானின் கைகளில் நிறைத்து வைக்கப்பட்டவை என்பதால், எந்தவித எதிர்மறை சக்திகளாலும் இவற்றை நெருங்கக் கூட இயலாது என்பது நிதர்சனமான உண்மை
கருடனின் இறக்கைகளில் அமுதம் இருப்பதாகச் சொல்கிறது புராணம், தன்னுடைய தாய் விநதையை, அடிமைத் தன்மையில் இருந்து விடுவிக்க தேவேந்திரனின் அனுமதியுடன் அமுத கலசத்தை எடுத்து வந்தார், கருடபகவான். அந்த சமயத்தில் அவரது சிறகுகளிலும் கைகளிலும் அமுதம் வழிந்தது.
இதனாலேயே சுருடனின் சிறகுகளின் காற்று பட்டாலே கூட பிணிகள் எல்லாம் நீங்கும் என்பது ஐதிகமானது இராமாயணத்தில்கூட ராம லக்ஷ்மணரின் நாகபாச மயக்கத்தினைத் தீர்க்க கருடன் வந்த சம்பவம் கூறப்பட்டுள்ளது.
விஷத்தினால் ஏற்பட்ட மயக்கத்தைத் தன் சிறகுக் காற்றினால் நீக்கிய கருடன், அவர்களைத் தன் சிறகினால் வருடி காயங்களையும் போக் கினாராம்
எந்த சுருடனின் காற்றுபட்டாலே விஷங்களால் ஏற்படும் நோய் உள்பட அனைத்தும் நீங்குமோ அந்த கருடனின் கரங்களிலேயே, அதுவும் அவர் பெருமாளின் திருவடியைத் தாங்கியிருந்த சமயத்தில் வைக்கப்பட்டன, இந்த தன்வந்திரி யந்திரங்கள். அதாவது, ஒரே சமயத்தில் பெருமாளின் திருவடியிலும் பெரிய திருவடியான கருடனின் கைகளிலும் வைத்து ஆராதிக்கப்பட்டன.
இந்தக் காட்சியை கண்ட சிலர், குமுதம் பக்தி ஸ்பெஷல் தன் வாசகர்களின் நலனுக்காக வேறு எந்தப் பத்திரிகையும் செய்யாத இத்தகைய விசேஷ பூஜையினை செய்வதைப் பார்த்து சிலிர்த்ததும், சிலாகித்ததும் நெகிழ்ந்ததும் நிஜம்
தன்வந்திரி யந்திரத்தினை உங்கள் உள்ளங்கையில் வைத்து நன்றாக உற்றுப் பாருங்கள். தன்வந்திரி பசுவானின் மூல மந்திரம் உள்ளிட்டவையே அந்த யந்திரத்தில் பதிக்கப்பட்டுள்ளன.
தன்வந்திரி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரமான
ஓம் தத்புருஷாய வித்மஹே
அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி
தந்நோ தந்வந்த்ரி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தினை பதினொரு முறை சொல்லுங்கள். பிறகு, ஏற்கெனவே நீங்கள் யந்திரங்களை ஒட்டித் தயாராக வைத்திருக்கும். சர்வ சித்தி மகா யந்திர அட்டையை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
தன்வந்திரி யந்திரத்தினை உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள். தன்வந்திரி பகவான் அவதாரம் செய்தது, தேய்பிறை திரயோதசி தினத்தில் அன்று இந்த பூஜையைச் செய்யலாம். தன்வந்திரி பசுவான். பெருமாளின் அம்சம் என்பதால் சனிக்கிழமைகளிலும் இந்த பூஜையைச் செய்யலாம் மேலும் சனிபகவானே ஆரோக்யத்திற்கு உரிய கிரஹம் அவருக்கு அந்தக் கிழமையில் பெருமை சேரும் என வரமளித்தவர் மகாவிஷ்ணு. எனவே சனிக்கிழமையில் செய்வது இரட்டிப்பு சிறப்பு பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள தன்வந்திரி யந்திரத்திற்கு தூப, தீபம் காட்டி ஆராதியுங்கள். பிறகு
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:
அமுதகலசத்தினை ஏந்தியிருப்பவரும், அகிலத்தைக் காப்பவரும், மூவுலகினருக்கும் மருத்துவராக விளங்குபவரும். எல்லாவகையான நோய்களையும் விரட்டுபவரும். மகாவிஷ்ணுவின் அம்சமாகத் திகழ்பவருமான தன்வந்திரியை வணங்குகிறேன்.
துதியையோ அல்லது தமிழ் அர்தத்தினையோ மூன்று முறை உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சொல்லுங்கள்.
பால் பாயசம் அல்லது பால்கலந்த அவல் அல்லது கல்கண்டு சேர்த்த பால் நிவேதனம் செய்யுங்கள். சுக்கு வெல்லம் கலந்த உருண்டையும் நிவேதனம் செய்யலாம்.
பூஜைகளை நிறைவு செய்து, சற்று நேரத்திற்குப் பின் சர்வசித்தி மகா யந்திரக் கட்டங்கள் உள்ள அட்டையினை எடுங்கள். அதில் தன்வந்திரி யந்திரத்தினை 11 ஆம் எண் உள்ள கட்டத்தில் ஒட்டுங்கள்.
(இங்கே ஏன் ஒட்டவேண்டும். எந்த அடிப்படையில் இந்த சர்வசித்தி மகாயந்திரம் உங்களுக்கு முழுமையான பலன் தரப்போகிறது என்பதெல்லாம். பன்னிரண்டு கட்டங்களிலும் நீங்கள் யந்திரங்களை முழுமையாக ஒட்டியபிறகு சொல்லப்படும்.
இதோ இப்போது சர்வசித்தி மகாயந் திரத்தில் ஓட்டப்பட்டுள்ள மற்ற யந்திரங் களைப் போலவே இந்த தன்வந்திரி யந்திரமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது.
இனி உங்கள் வீட்டில் நோய் நொடிகள் அண்டாது. நெடுங்காலமாக வாட்டும் பிணிகள் இருந்தால் அவற்றின் தாக்கம் குறைந்து படிப்படியாக நீங்கும்.
முக்கியமான விஷயம். தன்வந்திரி யந்திரம் வைத்துவிட்டதால், சிகிச்சையோ மருந்து, மாத்திரைகளோ வேண்டாம் என்று அர்த்தம் அல்ல. இந்த யந்திரத்தின் ஆற்றல் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நன்கு செயல்பட வைக்கும். மேலும் அதன் மருந்துத் தன்மையை உங்கள் உடல் சீராக ஏற்றுக் கொள்ளச் செய்யும். புதுவகை மருத்துவம் செய்ய அல்லது மருந்துகளில் மாற்றம் செய்ய மருத்துவர்களுக்கு எண்ணம் ஏற்பட்டு அதனால் உங்கள் பிணி சீக்கிரம் தீரும்.
நோய் குணமாவது, நல்ல மருத்துவரும் மருத்துவமும் கிடைப்பதில்தான் என்பார்கள். அவை உங்களுக்குக் கிடைத்திட இந்த யந்திரத்தின் ஆற்றல் உதவும்.
எத்தகைய பிணியானாலும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே இறை அருள் நிறைந்திட தன்வந்திரி பசுவானை நினைத்து அவருடைய இந்த யந்திரத்தினை முழு நம்பிக்கையுடன் வணங்குங்கள்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நிச்சயம் நல்ல ஆரோக்யத்துடன் விளங்குவீர்கள். தன்வந்திரி பகவான் அதற்குப் பரிபூரணமாக
ஆசிபுரிவார்.