ஆன்மிகம்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? 12 ராசிகளின் பலன்கள்...

By Sumalekha
01 Sep 2026, 07:29 AM
இன்று உங்கள் ராசிக்கு பணவரவா, குடும்ப மகிழ்ச்சியா அல்லது எதிர்பாராத திருப்பமா? முழு ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
மேஷம் :

இன்று புதிய பணிகளைத் தொடங்குவதில் அவசரம் வேண்டாம். குடும்ப உறவுகளால் சிறு சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடு விரைவில் மறையும். வியாபாரம் வழக்கமான நிலையிலேயே இருக்கும்.

ரிஷபம் :

வாழ்க்கைத்துணை தொடர்பான செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் தேவை. வார்த்தைகளால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகாமல் கவனிக்கவும். தொழிலில் பணியாளர்கள் மூலம் கூடுதல் செலவுகள் வரலாம்.

மிதுனம் :

மிதுன ராசிக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்; நல்ல முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மை ஏற்படும். குடும்ப உறவில் அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும், பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம் :

தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் தொடர்பாக சில பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பப் பணிகளில் அலைச்சல் இருந்தாலும், வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம் :

இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குப் பிறகு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் வழக்கமான விற்பனை இருக்கும்.

கன்னி :

மனக்குழப்பங்கள் படிப்படியாக நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் நன்மையும், சில சங்கடங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசுவது மனதுக்கு நிம்மதி தரும். வியாபாரத்தில் லாபம் சற்று குறையலாம்.

துலாம் :

தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இளைய சகோதரர்கள் காரணமாக செலவுகள் ஏற்படலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்காக கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

விருச்சிகம் :

எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம்; அதேநேரம் திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்ப்புகள் மற்றும் தடைகள் குறையும். வாழ்க்கைத்துணை மூலம் நன்மை கிடைக்கும். தொழிலில் பணியாளர்களின் ஆதரவு இருக்கும்.

தனுசு :

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புள்ளது. எனினும், புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பாக சிறு பிரச்னைகள் வரலாம். வியாபாரம் சீராக நடைபெறும்.

மகரம் :

கையில் பணம் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். தேவையற்ற பயணங்களையும் செலவுகளையும் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை நன்றாக இருந்தாலும் பணியாளர்களால் செலவு ஏற்படலாம்.

கும்பம் :

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்; பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம் :

இன்று எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்கலாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். வியாபாரத்தில் விற்பனை மற்றும் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.