சமந்தா 2010-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'ஏ மாயா சேசாவே' (தெலுங்கு) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை முறைப்படி முதல் திருமணம் செய்துகொண்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர் 'மா இண்டி பங்காரம்' (Maa Inti Bangaaram) என்ற திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்' மூலம் 2026 மே மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
Read Next Story