சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவையில் ஒப்பணக்கார வீதி, டவுன் ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் சாலைகளில் நீர் தேங்கியதன் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்திலும் அய்யம்பேட்டை, அம்மன்பேட்டை, திருவையாறு, பூதலூர், வல்லம், திருமலை சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நீலகிரியில் 2 நாட்களாக கனமழை பெய்து வரும் கனமழையால் குரும்பாடி, காட்டேரி பார்க், குன்னூர்,வண்ணார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அருவங்காடு, பர்லியார், காட்டேரி உட்பட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதேபோல திருவண்ணாமலையில், ஏந்தல், அரசம்பட்டு, நொச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
What's Your Reaction?