வீடியோ ஸ்டோரி

விசிக மது ஒழிப்பு மாநாடு... கட்டிய கொடி கம்பங்களை களவாடிய மர்ம நபர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.