"ராமதாஸ் என்ன உத்தமரா..?" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்
அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி குறித்து விமர்சித்தற்கு பதிலடி கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில்பாலாஜி வழக்கிற்கு பின்னால் உள்ள அரசியலை ராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். பாஜகவில் செந்தில்பாலாஜியை சேர்த்து திமுகவுக்கு எதிராக களமாட நினைத்தனர் எனவும் அதற்கு அடிபணியாமல் அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம் எனவும் ஆர்.எஸ்.பாரதி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், அமலாக்கத்துறையை பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் துறையாக ஏவப்படுவதை திமுக எதிர்த்து கொண்டிருக்கும் சூழலில் அதனை ராமதாஸ் ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் வினவியுள்ளார்.
What's Your Reaction?