வீடியோ ஸ்டோரி

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.