அமெரிக்காவில் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு கொடுத்த இந்திய வம்சாவளியினர்!
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று (செப்.21) காலை அமெரிக்கா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற அவருடன், உயர் அதிகாரிகளும் பயணித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வார் நகரில் நடக்கிறது.
What's Your Reaction?