'பாமகவையும் பாஜகவையும் வேண்டாம் என்று சொல்வதற்கு இது மட்டுமே காரணம்' - திருமாவளவன் பதில்

Sep 15, 2024 - 00:29
 0

“மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடும் கூட்டணி அரசியலோடும் முடிச்சுப்போட வேண்டாம். அப்படி செய்தால் இந்த மாநாட்டின் நோக்கமும், அதன் தூய்மையும் கலங்கமாகிவிடும். மதுவை ஒழிக்க நினைக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க நாங்கள் நினைக்கிறோம். மதுவை ஒழிப்பதற்காக நாங்கள் அதிமுகவோடு கைகோர்க்கக் கூடாதா? மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதிமுகவினர் உண்மையிலேயே நினைத்தால் மேடையில் வந்து பேசட்டும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாமக மற்றும் பாஜகவால் எந்த சூழலிலும் சாதியையும் மதத்தையும் விட முடியாது என பல முறை நிரூபித்து விட்டனர். எனவே இந்த மாநாட்டிற்கு நான் அவர்களை அழைக்கவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow