அதிமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசை சாடிய ஆர்.பி.உதயகுமார்
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் பிச்சைக்கனி என்பவரது வீட்டின் முன்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?