#BREAKING : பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடிகரும் தவெக தலைவருமான விஜய் முதலில் மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார். அதில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" என்று கூறியிருந்தார்.
What's Your Reaction?