தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முழுவதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி உருவாக்க வேண்டும்; கல்லூரியில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்; சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களில் சிலரை கல்லூரிக்குள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காத நிலையில் அதுகுறித்து கேட்க சென்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களையும் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?