வீடியோ ஸ்டோரி

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.