Nayanthara fairy tale Revie: குழந்தை முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை..
திரைத்துறையில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்ற போது நயன்தாரா Beyond the Fairy Tale ஆவணப்படம் எடுத்து முடிக்கப்பட்டது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடிதான் படத்தின் பாடல்களை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆவணப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில். பல்வேறு தடைகளை தாண்டி இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஒரு மணிநேரம் 22 நிமிடம் உள்ள இந்த ஆவணப்படத்தில் கேரளாவின் திருவல்லா என்ற சிறிய நகரில் இருந்து வந்த நயன்தாரா, தென்னிந்திய திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக எவ்வாறு உருவெடுத்தார் என்பது பற்றியும் அவரது திரைவாழ்க்கை, சவால்கள், ஏமாற்றம், காதல், திருமணம், குழந்தைகள் குறித்து காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படம் வெளியான பிறகு அவரது உடல் தோற்றம், கதைத்தேர்வு ஆகியவை குறித்து தீவிரமாக ட்ரோல் செய்யப்பட்டதாகவும் அதை எப்படி கையாள்வது என்று தனக்கு தெரியவில்லை என்றும் இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன் எனக்கு வேறு வழியில்லை என்றும் நயன்தாரா இந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். இந்த இடத்தில் அதற்கான பின்னணி பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் வெளிப்படையாக எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
நயன்தாரா குறித்து நடிகை ராதிகா சரத்குமார் கூறும்போது, ஆண்கள் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நயன்தாரா தனது விடாமுயற்சியால் தகர்த்தெறிந்தார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய திரைப்பிரபலங்களான நாகார்ஜுனா, ராணாடகுபதி, தமன்னா பாட்டியா, உபேந்திரா, பார்வதி திருவோதி, விஜய்சேதுபதி ஆகியோர் நயன்தாரா குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த ஆவணப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் முதல்பாதியில் ஆவணப்படம் விறுவிறுப்பாக உள்ளதாகவும், இரண்டாம் பாதி கிரிஞ்சாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?