முல்லை பெரியாறு விவகாரம்.. EPS-க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.