கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்.. கொந்தளித்த மக்கள்...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் புகார். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரக்கோணம்- பேரம்பாக்கம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிகழ்வால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
What's Your Reaction?