மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜாபெல் தொழிற்சாலை திருச்சிக்கு வருவதால் அண்டை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றார். தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என மத்திய அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாவிஷ்ணு சம்பந்தமாக முழுமையான விசாரணை முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்து அது குறித்து முடிவு செய்யப்படும் எனக்கூறினார். மேலும், அறிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு செல்லும் போது, மூடநம்பிக்கைகளை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
What's Your Reaction?