அநியாயமா கொன்னுட்டாங்க..கதறும் உறவினர்கள்! கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பித்தப்பையில் கல் இருந்ததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவர்கள் இல்லாததே இளைஞர் உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?