வேங்கை வயல் விசாரணை முழுமையாக இல்லை என குற்றச்சாட்டு-அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
வேங்கை வயல் விவகாரம்
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Read more: சிறார்கள் ஏற்படுத்தும் வாகன விபத்து முதலிடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சித் தரும் iRAD ரிப்போர்ட்!
ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்ற மனுதாரரை காவல்துறையினர் ஊருக்குள் அனுமதிக்கவில்லை என்றும் இருந்தபோதிலும் ஊருக்குள் சென்று விசாரித்த போது, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி காவல்துறையினர் மிரட்டியதாகவும், அரசு வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு உத்தரவு
சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில் எப்படி அசுத்தம் செய்வார்கள் என்று கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம் என்றும் வாதிட்டார்.
Read more: அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு...வாழ்த்து சொன்ன விஜய்
காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?






