காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேலிய பெண் வீரர்களை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் நான்கு பேரை ஹமாஸ் விடுவித்தது.

Jan 26, 2025 - 14:20
 0
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேலிய பெண் வீரர்களை விடுவித்த ஹமாஸ்
இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் நான்கு பேரை ஹமாஸ் விடுவித்தது

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

இதில் இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 15 மாதங்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல்- காசா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. ஆனால், இவை தோல்வியில் முடிவடைந்தது. இதனிடையே, பிணைக் கைதிகளை  விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். 

இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல்– காசா இடையிலான போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து முதற்கட்டமாக ஹமாஸ் படையினரிடம் பணய கைதிகளாக உள்ள 200 பேரில்  33 பேரை ஆறு வாரங்களில் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள ஆயிரத்து 904 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்தன. 

மேலும் படிக்க: இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதற்கட்டமாக மூன்று பணய கைதிகளை  ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்ததன் மூலம் இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாம லெவி மற்றும் லிரி அல்பாக்  ஆகிய நான்கு பெண் பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. 

இந்த நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளாவர். இந்த ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அந்த பெண்கள் ‘இது மகிழ்ச்சிகரமான நாள். நாங்கள் மிகவும் நன்றாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow