வெளுத்து வாங்கப்போகும் கனமழை! இந்த ஊர் மக்கள் கவனமா இருங்க!

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Oct 11, 2024 - 21:25
 0

தமிழ்நாட்டில் வருகிற 15 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும்  மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு, இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow