அத்தப்பூ கோலத்தை அலங்கோலமாக்கிய பெண்.. அதிரடியாக பாய்ந்த வழக்கு
விடிய விடிய விழித்து குழந்தைகள் உருவாக்கிய பூக்கோலத்தை கால்களில் மிதித்து பெண் ஒருவர் கலைத்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, சம்பீஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
அப்போது அபார்ட்மென்டின் பொது உபயோக பயன்பாட்டில் உள்ள இடத்தில், ஓணத்துக்காக சிறுமிகள் ஒன்றிணைந்து அதிகாலை 4 மணிவரை கண்விழித்து, அழகிய அத்தப்பூ கோலம் உருவாக்கி இருந்தனர்.
எல்லோரும் ரசிக்கும்படி இருந்த அந்த பூக்கோலம், அதே அபார்ட்மென்டில் வசிக்கும் சிமி நாயர் என்ற மலையாளப் பெண்ணுக்கும் மட்டும் எரிச்சலை ஏற்படுத்த கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே; பொது இடத்தில் ஏன் போட வேண்டும்' என்று ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வாதம் செய்தபடி பூக்கோலத்தை மிதித்தபடி நின்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுக்க, அப்போதும் எதிர்ப்பு காட்டியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஒரு கட்டத்தில் பூக்கோலத்தை காலால் தள்ளி கலைத்திருக்கிறார்.
What's Your Reaction?