கோவையில் பிரியாணி போட்டி - வழக்குப்பதிவு | Kumudam News 24x7
கோவை ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி பிரியாணி போட்டி நடத்தியதாக உணவகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பிரியாணி போட்டி, முன் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?