வீடியோ ஸ்டோரி

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

By saravanakmr
16 Oct 2024, 04:04 PM
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருவதாக கூறினார். வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவும் அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.