வீடியோ ஸ்டோரி

பெண் வனக்காப்பாளர் லஞ்ச பேரம்... தூக்கி அடித்த மாவட்ட அதிகாரி!

By VASUKI
29 Nov 2024, 07:20 AM
வனப்பகுதியில் ஆடு மேய்க்க, அனுமதி அளிக்க, லஞ்சம் வாங்கிய பெண் வனக் காப்ப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராதாபுரம் வன காப்புக்காட்டில்  வனக்காப்பாளராகப் பணி செய்து வந்தவர் முருகேஷ்வரி.


காப்புக்காட்டில் கால்நடைகளை மேய்க்க அனுமதி அளிப்பதற்காக விவசாயிகளிடம் ஆடு, கோழி, பணம் என்று முருகேஷ்வரி லஞ்சமாக பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.