தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பூண்டி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து வந்த இளைஞர்கள் 5 பேர் கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கினர். அதில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடர்கிறது