திரைத்துறையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 'அரசன்'. இந்த மெகா கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 'வடசென்னை' படத்தின் பின்னணியில் உருவாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றி மாறன் படத்திற்கு அனிருத் முதல் முறையாக இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் சிலம்பரசன் இன்று அதிகாலையிலேயே தனது 'எக்ஸ்' ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தின் சுவாரசியமான தருணங்களுடன் வெளியான இந்த வீடியோ, தற்போது சிம்புவின் ரசிகர்களாலும் சினிமா பிரியர்களாலும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
That’s a wrap on one amazing big schedule for #Arasan 🌙🎬
— Silambarasan TR (@SilambarasanTR_) June 26, 2026
Time to recharge, recover, see some daylight, and get ready for what comes next. #VetriMaaran @anirudhofficial @theVcreations pic.twitter.com/iAuzE5Nn1P